துப்பாக்கி தோட்டாவுடன் வேலைக்கு போன ராணுவ வீரர் விமானநிலையத்தில் முடக்கம்

0
249

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அதிகாலை டெல்லிக்கு விமானம் செல்ல இருந்தது. விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த விக்னேஷ்(30) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அபாயகரமான பொருள் இருப்பதாக அலரம் ஒலித்தது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் சூட்கேசை திறந்து பாத்த்தனர். அதில் விக்னேஷின் ராணுவ உடையில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்தது. இது பற்றி விக்னேஷிடம் அதிகாரிகள் விசாரித்த போது, ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறேன்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துவிட்டு பணிக்கு திரும்புகிறேன் என்றார். விமானத்தில் துப்பாக்கி, தோட்டா போன்ற அபாயகரமான பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்பதால் அவரது பயணத்தை ரத்து செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணைக்கு பின் துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்து அனுப்பி வைக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here