கனிமவள கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை – ஸ்ரீவை புதிய டிஎஸ்பி அதிரடி

0
776

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாயவன் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த மாயவன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக ராமகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி அலுவலக கொள்கை எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் தலை மறைவு குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். இயற்கை வளங்களை சுரண்டும் எந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடையாது. சட்டவிரோதமாக நடைபெறும் கனிம வளக் கொள்ளைகளுக்கு எதிராகவும் போதைப் பொருட்கள் விற்பனைகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இன்றி பேனர்கள் வைக்க கூடாத. அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்களும் நிகழ்ச்சி முடிவடைந்த ஓரிரு நாட்களில் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். லைசன்ஸ் பெறாமல் வாகனங்களை ஒட்டும் சிறார்கள் பெற்றோர்கள் மீதும் பெற்றோர்களை வயதான காலங்களில் பராமரிக்காத குழந்தைகள் குறித்த புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here