தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் குலசை ரஸ்தா தெருவில் இருந்து அமராவதி குளம் செல்லும் சாலையில் இருபுறமும் முள் செடிகள் வளர்ந்து சாலையின் நடுவில் எவரும் செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது. இந்த வழியாகத் தான் பல்வேறு சமூகத்தினர் மயானம் மற்றும் கல்லறை தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் இறுதி சடங்கு வாகனங்கள் இந்த பாதையில் செல்ல முடியாமல் சிக்கி திணறுகி ன்றன . எனவே இந்த சாலையில் இறுதிப் பயணத்திற்கும் இடையூறாக உள்ள முள் செடி மற்றும் தேவையற்ற மரங்களை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.