பதக்கங்களை நோக்கி பாயும் மல்யுத்த வீரர்கள்

0
830

இந்திய மல் யுத்த வீரர்கள் இருவர் பதக்கங்களை கவரும் வகையில் முன்னேறியுள்ளனர்.

57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா கொலம்பிய வீரருக்கு எதிரான முதல் போட்டியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். 13-2 என அபார வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

முதல் 3 நிமிடங்களில் 3 புள்ளிகள் பெற்றிருந்தவர், அடுத்த 3 நிமிடங்களில் 10 புள்ளிகள் பெற்றார்.

அரையிறுதிப் போட்டியில் அவர் நுரிஸ்லம் சனயேவ் எனும் கஜகஸ்தான் வீரரைத் தோற்கடித்தார்.

தீபக் பூனியா ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவில், நைஜீரிய வீரர் அகியோமாரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிபெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here