இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்
நெல்லை போலீஸ் கமிஷனர் என். பாஸ்கரன் மாற்றப்பட்டார். சென்னை செயலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விடுமுறையில் சென்று இருந்த போலீஸ் ஐ.ஜி. தீபக் எம்.தாமோர் நெல்லை நகரின் புதிய போலீஸ் கமிஷனராக பதவி ஏற்கிறார்.
சென்னை மனித உரிமை மற்றும் சமூக நீதி உதவி ஐ.ஜி.யாக பணியாற்றும் ரங்கராஜன் சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக (III) நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி. (III) சூப்பிரண்டாக பணியாற்றிய நிஷா பார்த்திபன் பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்டு திஷா மிட்டல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்கிறார்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10-வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார் இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.









