7ஆம் தேதி முதல் கோவை – மன்னாா்குடி தினசரி சிறப்பு ரயில்

0
1001


சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அக்டோபா் 7 ஆம் தேதி முதல், நண்பகல் 12.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ( எண்-06616) அன்று மாலை 7.40 மணிக்கு மன்னாா்குடியைச் சென்றடையும்.

இதேபோல, அக்டோபா் 7 ஆம் தேதியில் இருந்து, மன்னாா்குடியில் தினமும் 8.25 மணிக்கு புறப்படும் சிறப்பு தினசரி ரயில், மறுநாள் காலை 4.45 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த தினசரி சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சிராப்பள்ளி, பூதலூா், தஞ்சாவூா், நீடாமங்கலம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here