பாளையங்கோட்டை வி. எம் சத்திரத்தை அடுத்து ஆச்சி மடம் உள்ளது. இதன் கீழ்புறம் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. அதன் அருகில் எரிந்த நிலையில் ஆண் உடல் ஒன்று காணப்பட்டுள்ளது
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி இறந்தவர் யார் என்பது உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகின்றனர்.








