மாவட்ட தலைவரை நீக்க வலியுறுத்தி மண்ணெண் ணெய் கேனுடன் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்

0
421

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும், கோவில்பட்டி நகர தலைவர், கோவில்பட்டி, கயத்தார் வட்டார தலைவர்கள் பதவி நீக்கத்தினை கண்டித்தும், நேரு, இந்திரகாந்தி படத்தினை

தவிர்க்கும் மாவட்ட தலைவர் காமராஜை கண்டித்தும், சாதி மற்றும் பணத்தின் அடிப்படையில் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியும் அக்கட்சியின் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டி காந்திமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது கோரிக்கைகயை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் காந்தி சிலை முன்பு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி மண்ணெணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் முன்னாள் நகர தலைவர் சண்முகராஜ், முன்னாள் வட்டார தலைவர்கள் ரமேஷ்மூர்த்தி, செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here