தூத்துக்குடியில் இளம் பெண்கள் திடீர் மாயம்

0
219

தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் சுடலை மகள் பிரிந்த (19), இவர் தூத்துக்குடியில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தந்தை மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) சோபா ஜென்ஸி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் 


மற்றொரு சம்பவம்: 

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் மாரியம்மாள் (21), இவர் கடந்த 2ம் தேதி  ராஜீவ்  நகரில் உள்ள அண்ணன் காளிபிரகாஷ்ராஜ் வீட்டுக்கு சென்றாராம். பின்னர் 3ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இது தாெடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் (பொ) வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here