திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், வயலூர் முருகன் கோவில், திருவானை கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில், மலைக்கோட்டை வளாக கோவில்கள் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் வருகிற 02.08.2021 மற்றும் 03.08.2021தேதி ஆகிய இரு நாட்களில் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு முதலிய நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவேரி ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் சு சிவராசு தெரிவித்தார்.