சிறுமி பலாத்காரம்: பாஜக எம்.எல்.ஏ. இருப்பிடம் கூற ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

0
661

2017ஆம் ஆண்டு உத்தரபிரதேச உன்னாவ் நகரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  சிறுமியை பாலியல் குற்றம் சாட்டப்பட்டது. காவல் நிலையம் சென்று நியாயம் கிடைக்காத காரணத்தினால் முதல் மந்திரி யோகி வீடு முன்னதாக சிறுமி தீக்குளிக்க முயன்றாள். இதனையடுத்து 2018 ஏப்ரலில் இவ்விவகாரம் வெளியே தெரிந்து செங்கார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் தந்தை கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் இந்த வருடம் ஜூலையில், சிறுமி சென்ற கார் ரேபரேலியில் விபத்துக்குள் சிக்கியது. இதில் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயம் அடைந்தனர்.அவருடன் சென்ற இரு உறவுக்கார பெண்கள் உயிரிழந்து விட்டனர். ரேபரேலி சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற போது நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, டெல்லியில் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி தர்மேஷ் சர்மா, உன்னாவ் வழக்கில் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த நாளில் எம்.எல்.ஏ. செங்காரின் இருப்பிடம் மற்றும் பிற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

இதற்கு 2 வார காலஅவகாசம் வேண்டும் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டது. இதனை அடுத்து வருகிற அக்டோபர் 9ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here