இன்று காலை வட்டு எறிதலில் இந்தியா சார்பில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தார் கமல்ப்ரீத் கவுர்.
திங்கள் கிழமை இறுதிப்போட்டி நடக்கிறது. நிச்சயமாக பதக்கம் வெல்வார் என நினைக்கிறேன். காரணம், இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற தேவையான 64 புள்ளிகளை இரண்டு வீராங்கனைகள் மட்டுமே எடுத்திருந்தனர். அதில் ஒருவர் கமல்ப்ரீத் கவுர். மற்ற எல்லாருமே 64 க்கு கீழேதான் எடுத்திருந்தனர். 66 புள்ளிகளுக்கு மேல் பெற்று ஒரு தேசிய ரெக்கார்டையும் கமல்ப்ரீத் வைத்திருக்கிறார். இதனால் இவர் சாதாரணமாக பதற்றமின்றி தன்னுடைய வழக்கமான வீச்சை சரியாக செய்தாலே பதக்கம் வெல்லும் வாய்ப்பிருக்கிறது.

இவரை பற்றி படிக்கும் போது ஒரு விஷயம் கவனம் ஈர்த்தது, பள்ளியின் பெரிதாக படிப்பில் நாட்டமில்லாதவராக இருந்திருக்கிறார். எளிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்படிப்பை முடித்தவுடனேயே திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருந்திருக்கிறார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே கூடுதல் வெறியோடு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டுயிருக்கிறார். இப்போது ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையாக உயர்ந்திருக்கிறார்.













