மதுரை சிட்டி கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் சாத்தான்குளம் அருகே வேலன் புதுக்குளம் பகுதியில் ரகசிய தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பதாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட மூட்டைகளில் உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து அவற்றினை எடை போடும் பணியில் விடிய விடிய ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போலீசார் நள்ளிரவு முதலே பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முட்டையினை எடை போடும் பணியினை ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது வரை அதன் எடை போடும் பணி முடியாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2500 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்துள்ளது.
.









