ஆட்சியமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.
ஹரியானா முன்னாள் முதல்வரும், ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் தொடங்கிய ஜனநாயக் ஜனதா கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்திருந்ததால் பாஜகவினர் தன்னை பார்க்க வருவார்கள் என ஆவலுடன் காத்திருந்தார். பத்திரிகைகள் வேறு அவரை கிங் மேக்கராக சித்தரித்தன. அவரை நேற்றிரவு டெல்லியில் அமித்ஷா சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.
ஆனால், இன்று தேவிலால் மகன் ரஞ்சித்சிங் உட்பட 9 சுயேட்சைகள் ஆதரவில் ஆட்சி அமைக்க பாஜக தயாராகிவிட்டது. தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமித்ஷா மற்றும் நட்டாவை மனோகர்லால் கட்டார் சந்திக்கிறார். நாளை சண்டிகரில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதனால் அமைச்சர் பதவி உள்ளிட்ட சில சலுகை பட்டியலுடன் காத்திருந்த துஷ்யந்த் ஏமாற்றமடைந்துள்ளார்.















