கொடைக்கானல்: ஆபத்தான வனப்பகுதியில் அனுமதி பெறாமல் ‘டென்ட்’ அடித்து தங்கும் சுற்றுலாப்பயணிகள்

0
1465

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இ-பாஸ் பெற்று அதிகமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர் இந்நிலையில்  கொடைக்கானல் மலை கிராமங்களான பள்ளங்கி,பூம்பாறை,மன்னவனூர்,கூக்கால்,உள்ளிட்ட கிராமங்களில் வனப்பகுதி ஒட்டியும்  அரசின்  அனுமதி பெறாமல் விவசாய நிலங்கள் மற்றும் வருவாய் நிலத்தில் டென்ட் கூடாரம் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது,

டென்ட் கூடாரத்திற்கு என்று கர்நாடக,கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த  இளைஞர்கள் வருகை புரிந்து  அதிகமாக தங்கி வருகின்றனர்,சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு   எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமலும் அனுமதிக்கப்படுகின்றனர்..

வனப்பகுதியை ஒட்டி வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் கூடாரங்கள் அமைக்கப்படுவதால்  இரவு நேரத்தில் டென்ட் கூடாரத்தில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு  வனவிலங்குகளால் ஆபத்து நேரிடும் அபாயமும் இருக்கிறது

இதனை காவல் துறை மற்றும் வருவாய் துறைமற்றும் வனத்துறை  அதிகாரிகள் கவனம் செலுத்தி  அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அனுமதியின்றி  டென்ட் கூடாரம் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here