கடம்பாகுளத்தில் விதி மீறி மணல் அள்ளியவர்கள் மீது குற்ற நடவடிக்கை – ஏரல் தாசில்தார் அறிக்கை

0
719

தூத்துக்குடி மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் செய்வதற்கும், விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கும் குளத்தில் வண்டல் மண் அள்ளிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு வழிமுறைகளையும் வகுத்துள்ளது. ஆனால் விவசாய நிலங்களுக்கும் மண்பாண்ட தொழிலுக்கும் பயன்படுத்தாமல் செங்கல் சூளைகளுக்கு மணல் அள்ளுவதாக புகார் வந்தது.

இந்த நிலையில் விதிகளை மீறி வண்டல் மண் அள்ளிய 27 டிராக்டர்களை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மதியம் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தது இது குறித்து காவல்துறையினர் நேற்று ஏரல் தாசில்தார் கோபாலுக்கு பறிமுதல் செய்த டிராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை அனுப்பி உள்ளது.

இதுகுறித்து ஏரல் தாசில்தார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் காவல்துறை நேற்று மாலை அனுப்பிய அறிக்கை அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்கள் மீது குற்ற நடவடிக்க மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here