ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள், ரோஸ் அவென்யு வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சிதம்பரம் புன்னகைத்தவாறே கோர்ட் வளாகத்திற்கு வந்து குற்றவாளி கூண்டில் நின்றார். இதனை பார்த்த நீதிபதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் சிதம்பரத்தை அமரும்படி கூற அவருக்காக நாற்காலியும் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த சிதம்பரம்,” வேண்டாம்… வேண்டாம்… பரவாயில்லை… நான் நிற்கிறேன்” என பதிலளித்ததுடன் . விசாரணை முடியும் வரை குற்றவாளி கூண்டிலேயே நின்றார்














