சென்னை ஆறு, கால்வாய் நாசம்: அரசு மனு தள்ளுபடி

0
600

சென்னையில் ஓடும் கூவம், அடையாறு போன்றவற்றையும் பக்கிங்ஹாம் உள்ளிட்ட கால்வாய்களையும் தூய்மையற்றதாக வைத்திருக்கும் தமிழ்நாடு அரசு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசுக்கு தீர்ப்பாயம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. இது 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கத்தக்க மோசமான நடவடிக்கை என கூறியிருந்தது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல் முறையீடு செய்தது. ஆனால், 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கத்தகுந்தது என பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளதே தவிர, அபராதம் விதிக்கவில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வழக்குக்கு செலவழிக்கும் தொகையை கொண்டு ஆற்றை தூய்மைப்படுத்தினால் தேவலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here