ஒலிம்பிக்: வென்ற வீரர்கள் மட்டும் 30 நொடி முக கவசத்தை கழற்ற அனுமதி

0
462

ஜப்பானில் கோவிட் தொற்று கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், போட்டிகள் தவிர்த்து பிற நேரங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், பதக்கம் பெறும் போது புகைப்படத்திற்காக 30 நொடிகள் மட்டும் முகக்கவசத்தை கழட்டலாம் என புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


இது பற்றி பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், “முகக்கவசம் அணிந்திருப்பது நன்றாக இருக்காது தான், இருந்தாலும் அணிய வேண்டியது அவசியமாகிறது. அதில் யாருக்கும் தளர்வில்லை. அனைவரையும் விதிகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வோம். இது விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், நமது ஜப்பானிய நண்பர்களுக்கும் முக்கியமானது.” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here