டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேல் வீரருக்கு எதிராக விளையாட மறுத்த அல்ஜீரிய ஜூடோ வீரர் ஃபெதி நூரினை அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
அவர் மீதும் அவரது பயிற்சியாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளனர்.
முதல் சுற்றில் சூடான் வீரரை சமன் செய்த நிலையில், இரண்டாவது சுற்றில் இஸ்ரேலிய வீரருடன் மோத வேண்டிய நிலை ஃபெதி நூரினுக்கு ஏற்பட்டது.
ஆனால் அவரும் பயிற்சியாளரும் இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்த முடிவை முன்னெடுத்ததாக ஃபெதி நூரின் விளக்கம் அளித்தார்.
2019ல் நடந்த உலக ஜூடோ சாம்பியன் போட்டியிலும், இதே இஸ்ரேலிய வீரருடன் மோதும் நிலை ஏற்பட்ட போது ஃபெதி நூரின் போட்டியில் இருந்து விலகிஇருந்தார்.