நங்கநல்லூரில் ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய அதிகாரி வீட்டில் 45 சவரன் தங்கம், வெள்ளி கொள்ளை

0
858

சென்னை ஆலந்தூர் அடுத்த நங்கநல்லூரில் ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(61)இவர் வீட்டு வசதி வாரிய ஓய்வு பெற்ற அதிகாரி ஆவர். இவர் நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பிறந்தநாள் விழாவுக்கு சென்று விட்டு இரவு 11மணி அளவில் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 45 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, 70 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஒரு லேப்டாப் காணாமல் போனது தெரிய வந்தது

உடனே இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில். சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here