கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று அந்த தேர்வின் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது .
இந்த தேர்வின் முடிவில் 99.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் வெறும்.5 சதவீத மாணவர்கள் மட்டுமே தோல்வி அடைந்து இருப்பதாக தெரிகிறது.இதில் தோல்வி அடைந். 5 சதவீத மாணவர்களின் மன உளைச்சலை போக்க கொடைக்கானலில் இலவச தங்கும் அறைகள் தருவதாக சுதீஷ் என்பவர் உறுதியளித்திருக்கிறார்.
கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சுதீஷ் கொடைக்கானலில் காட்டேஜ்கள் வைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு போது தேர்வில்
தோல்வியடைந்த மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனையான பதிவுகளை அதை அறிந்தவர், அவர்கள் மன உளைச்சலை போக்குவதற்காக தங்கும் அறை இலவச அறிவிப்பை வெளியிட்டார்.இந்த பதிவை இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட உடனேயே மிகவும் வைரலாக பரவத் தொடங்கியது
அறிவித்தபடியே தோல்வி அடைந்த மாணவர்கள் குடும்பத்தினருக்கு அறைகளையும் ஒதுக்கீடு செய்து இருக்கிறார். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தால் அது வாழ்வின் முடிவு இல்லை என்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் உலகில் பல இடங்களில் சாதித்த உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்
மேலும் தோல்வி அடைந்த மாணவர்கள் கொடைக்கானலுக்கு வரும் பொழுது அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இங்கு சில நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்
நம்மூர் மாணவர்களுக்கும் இப்படி ஒரு ஏற்பாட்டை யாராவது செய்தால் மகிழ்ச்சிதான்.















