சிறுமியை மணந்த தொழிலதிபர் உட்பட மூவர் கைது

0
491


கரூர் மாவட்டம் மண்மங்கலம் சேர்ந்தவர் விவேக் ( 23) தொழிலதிபரான இவர் கொசுவலை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கும் கோவை புலியகுளத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்மங்கலம் ஈஸ்வரன் கோயில் திருமணம் நடந்தது.

இதை அறிந்த வட்டார நல அலுவலர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்ததாக தொழிலதிபர் விவேக்மீதும் இந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக விவேக்கின் தந்தை கோபால் ( 54) தாய்வாசுகி ( 45) மற்றும் சிறுமியின் பாட்டி அந்தோணியம்மாள்( 65 )ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தார்.

இவர்களில் விவேக், கோபால், வாசுகி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ,இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here