ஓட்டை மதகை சரிசெய்யாமல் தண்ணீர் திறப்பு களிமண் பூசி விவசாயிகள் எதிர்ப்பு

0
1499

அரியலூர் மாவட்டம் சோழமதாவி கிராமத்தில் உள்ள 4 ஆம் நம்பர் கிளை வாய்க்கால் மதகு சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
இது இடிந்து விழும் நிலையில் உள்ளது.சோழமாதேவி கிராமத்தில் பொன்னாற்று பாசனம் மூலம் சோழமாதேவி, கோடாலி கருப்பூர், கண்டியங்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பொன்னாற்று வாய்க்காலில் உள்ள இந்த மதகு மூலமே நீர் பாசனம் நடக்கிறது தற்போது அந்த மதகு உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.


இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் தற்போது ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் சிதலமடைந்து கிடக்கும் மதகை களிமண்ணை குழப்பி கலவையாக கலந்து வெடிப்புகளில் பூசி தங்கள்்் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

சிதிலம் அடைந்துள்ள நான்காம் நம்பர் மதகினை போர்க்கால அடிப்படையில் பழைய மதகை அகற்றி விட்டு புதிதாக மதகு கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here