அன்றாட சமையலுக்கு வெங்காயம் அவசியமானது ஆகும். வெங்காயம் விலை, ஆட்சி மாற்றத்துக்கும் காரணமாக இருந்துள்ளது.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெங்காயம் விலை, கடந்த சில வாரங்களாக அதிகரித்தபடியே உள்ளது. கடந்த வாரம், தலைநகர் டெல்லியில் கிலோ ரூ.57 ஆக வெங்காயம் விலை இருந்தது. சென்னை போன்ற மற்ற பகுதிகளில் கிலோ ரூ.40 ஆக இருந்தது. ஆனால், இப்போது டெல்லியிலும், பிற பகுதிகளிலும் ரூ.80 ஆக உயர்ந்து விட்டது. வரத்து குறைவே இதற்கு காரணம் ஆகும்.
இந்நிலையில் டெல்லியில் நாளை முதல் வெங்காயம் கிலோவிற்கு ரூ.24 விற்பனை செய்யப்படும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஒரு குடும்பம் அதிகபட்சம் 5 கிலோ வெங்காயம் வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.