உ.பி.,யில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சமாஜ்வாதி, மொத்தமுள்ள, 80 இடங்களில், வெறும், 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனையடுத்து சமாஜ்வாதி கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை, அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் கூண்டோடு மாற்றி, அக்கட்சியின் தலைவர், அகிலேஷ் யாதவ், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.