ஏமனுக்கு சென்று வந்த இரு இளைஞர்கள் சென்னை விமான நிலையத்தில் கைது

0
477

ஏமன்,லிபியா நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால்,இந்தியா்கள் பாதுகாப்பு நலன் கருதி இந்த இரு நாடுகளுக்கு போகக்கூடாது என்று ஒன்றிய அரசு கடந்த 2014 ஆண்டில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.ஒன்றிய அரசின் உத்தரவை மீறி,இந்த நாடுகளுக்கு செல்பவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

ஒன்றிய அரசின் இந்த தடை உத்தரவு தற்போதும் அமலில் உள்ளது.

இந்நிலையில் ஏா்அரேபியா சிறப்பு விமானம் சாா்ஜாவிலிருந்து நேற்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

சென்னையை சோ்ந்த முகமது யாசீன்(30) மற்றும் பீஹாரை அன்சா்(31) சோ்ந்த இருவரின் பாஸ்போா்ட்களை சோதனையிட்டபோது இருவரும் சில ஆண்டுகளுக்கு வேலைக்காக சவுதி அரேபியா சென்றவா்கள்,சட்டவிரோதமாக இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்று வந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் வெளியில் விடாமல் குடியுறிமை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனா்.அதோடு குடியுறிமை அதிகாரிகள்,மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் நீண்ட நேரமாக துருவி,துருவி விசாரித்தனா்.அப்போது அவா்கள் அளித்த பதில்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் முகமது யாசீன்,அன்சா் ஆகிய இருவரையும் கைது செய்து,மேல் விசாரணைக்காக சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.போலீசாா் இருவா் மீதும் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்ததாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here