பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் இஸ்லாமிய நபரால் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் பத்திரிக்கைகளில் வெளியான அறிக்கையின்படி, ரெனோ குமாரி என்ற பெண் ஆகஸ்ட் 29-ஆம் தேதி சிந்து மாகாணத்தில் ரோகரி நகரில் இருந்து கல்லூரிக்குச் செல்லும்போது கடத்தப்பட்டார். தகவல் அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் தனது மகள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்யப்பட்டதாக புகார் அளித்தனர்.
இந்த சம்பத்தால் கோபமடைந்த பாகிஸ்தானில் உள்ள இந்து மத அமைப்பினர் உடனடி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசை வலியுறுத்தினர். பின்னர், கடத்தப்பட்ட பெண்ணை அவரது வீட்டிற்கு அனுப்ப பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டதால் நேற்று அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
கடத்தப்பட்ட பெண் பாதுகாப்பாக பெற்றோரிடம் திரும்பியதில் மகிழ்ச்சியளிப்பதாக பாகிஸ்தான் எம்.பி. ரமேஷ் குமார் தெரிவித்தார்.














