செங்கத்தில் பைக் திருடர் மூவர் கைது 5 பைக்குகள் பறிமுதல்

0
392

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு நடந்து வருகிறது.

அதுகுறித்த புகார்களை தொடர்ந்து செங்கம் துணை கண்காணிப்பாளர் சரவணகுமாரின் தலைமையில் செங்கம் நகரை சுற்றி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஒரே வாகனத்தில் 3 பேர் நகருக்குள் வேகமாக சென்று கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை நிறுத்த முயற்சி செய்தபோது காவலர்களை கண்டு வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக வாகனத்தில் 3 பேரும் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

அதைக்கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்தி பிடித்து விசாரணை மேற் கொண்டபோது மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்துள்ளனர் இதனால் சந்தேகமடைந்த காவல் ஆய்வாளர் இயேசு ராஜா அவர்கள் மூன்று பேரையும் செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில்

இவர்கள் 3 பேரும் கண்ணகுருக்கை சேர்ந்த மணிகண்டன் (22),வாணபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் வயது( 24), கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த விஷ்ணு ( 23) எனவும், செ ங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here