பெரியகுளம் மலைப்பகுதியில் வனத்துறை கூண்டுகளில் சிக்காமல் போக்கு காட்டும் சிறுத்தை நடமாட்டம் இன்றி மக்கள் முடக்கம்

0
651

கடந்த 10 நாட்களாகளுக்கும் மேலாக’ சிறு வண்டு சிக்கும்,சிறுத்தை சிக்காதுலே’ என்ற சினிமா பானியில் தேனி வனத்துறை ஏமாற்றி வரும் சிறுத்தையை பிடிக்கும் பனியில் வனத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பொதுமக்கள் மாலை நேரங்களில் செல்வது வழக்கம். இந்நிலையில் 23ஆம் தேதி மாலை கிரிவலப் பாதைக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். அதனை அடுத்து பெரியகுளம் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் பெரியகுளம் தென்கரை பேரூராட்சி நிர்வாகத்தினர் சேர்ந்து கைலாசநாதர் கோவிலின் கிரிவலபாதை பகுதிக்கு பொதுமக்கள் மாலை நேரங்களில் செல்ல வேண்டாம் அறிவுறுத்தினர்.


இதனை தொடர்ந்து தேனி வனச்சரக அதிகாரி சாந்தக்குமார் சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தார்.

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஆட்டுக்குட்டி கட்டிவைக்கப்பட்ட இரு கூண்டுகள் கடந்த மாதம் 27ஆம் தேதி வைக்கப்பட்டன.

கூண்டு வைக்கப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையிலும் இன்றுவரை சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட 2 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்காத நிலையில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தையால் கோயிலுக்கு மட்டுமின்றி பிற தேவைகளுக்காகவும் அந்த பகுதியில் மக்கள் நடமாடாமல் உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here