ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் இறுதி சில சுற்று வாக்குகள் எண்ணிக்கையில் சந்தேகம் தெரிவித்தும், செல்லாதென அறிவிக்கப்பட்ட தபால் வாக்குகளை சேர்த்து எண்ணக் கோரியும் அப்பாவு தொடர்ந்த வழக்கில் வாக்குப்பதிவு எந்திரங்களும், தபால் வாக்குகளும் மதுரைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த எண்ணிக்கையை அறிவிக்க தடை கோரி எம்.எல்.ஏ. இன்பத்துரை உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதன் அடிப்படையில் ஏற்கனவே ஒரு முறை தடை விதித்த நிலையில், இன்று வரும் 22ஆம்தேதி வரை எண்ணிக்கையை அறிவிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.