மேகதாது உள்ளிட்ட நீராதார திட்டங்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துவிட்டு அமைச்சர் துரை முருகன் கூறியதாவது:
ஜல்சக்தி அமைச்சர் அந்நியோன்னியமாக பழகினார். அதை விட பிரச்சினையை நன்கு புரிந்துவைத்துள்ளார். ஏற்கனவே கர்நாடகா எங்களுக்கு தரவேண்டிய தண்ணீரை இதுவரை தரவில்லை என்றேன். அதை தருமாறு முதலில் தர உத்தரவிடுங்கள் என்று கோரினேன்.
எங்களிடன் எந்த தகவலும் தராமல், மத்திய சர்க்காரை அணுகி திட்டம் தயாரித்துள்ளனர். டிபிஆர் வாங்காமல் எந்த அணையும் கட்ட முடியாது. தமிழ்நாட்டை கேட்காமல் எந்த அனுமதியும் வழங்கமாட்டோம் என அமைச்சர் சொல்லிவிட்டார். மத்திய, மாநில அரசு டிபிஆர் வாங்காமல் அணையை கட்டிவிட்டார்கள். இதுகுறித்து டிரிபியூனல் அமைக்கவேண்டும் என்று கூறியும் அமைகக்வில்லை என்றோம். உடனடியாக டிரிபியூனல் அமைக்க கூறிவிட்டார்.
முல்லை பேரியாற்றில் பேபி அணையை கட்ட்விடாமல் கேரளா தடுத்துவிட்டது. அணைக்கு முன்னால் உள்ள 4 மரத்தை வெட்டக்கூடாது என அடம் பிடிக்கின்றனர் என்பதை கூறினேன். கோதாவரி, காவேரி இணைக்காவிட்டாலும், நாங்கள் காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம். அதற்கு பணம் வழங்கவேண்டும். தாமிரபரணி பச்சையாறு கருமேனியாறு இணைப்பு திட்டத்துக்கும் தரவேண்டிய நிதி வழங்கவேண்டும் எனக் கேட்டோம்.














