மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி

0
463

நெல்லை அருகே உள்ள கோபால சமுத்திரத்தை சேர்ந்தவர் செந்தில் (40). இவர் மின்வாரியத்தில் ஊழியராக உள்ளார்.நேற்று இரவு திடியூர் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து செந்தில் அந்தப் பகுதிக்கு சென்று மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here