திமுக எம்.பி.க்களின் கூட்டம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி எம்.பி.க்களின் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லி ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்திருந்தார்
இந்நிலையில் வரும் 24ம் தேதி நடைபெற இருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் 29ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்













