அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை இணைத்துக்கொண்டார். ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு, தற்போது கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து தங்க தமிழ்ச்செல்வன் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவார் என்று க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளராக வி.பி கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.















