நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி, வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் வகையில் பரிசோதானை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக ஐந்து ட்ரோன்கள் மூலம் மாநகருக்கு உட்பட்ட என்.ஜி.ஓ காலனிப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதனை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் , நெல்லை மாவட்ட கொரோனா தடுப்புப்பணி கண்காணிப்பாளருமான செல்வி அபூர்வா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

இதனை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் , நெல்லை மாவட்ட கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியுமான செல்வி அபூர்வா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ’இந்த ட்ரோன் மூலம் 6 நிமிடத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு அளவி்ல் கிருமி நாசினி தெளிக்கமுடியும்.
இதில் தெளிக்கபடும் கிருமிநாசினி பயோ முறைப்படி தயாரிக்கப்பட்டது, இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது, புகையாகத்தான் வெளிப்படும். இந்த முறையை பல்வேறு பகுதிகளுக்கு விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் . மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைக்கு ஏற்ப கிடைகிறது’ என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.









