நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் நெல்லை தென்காசி மாவட்டங்களில் உள்ள 165 டாஸ்மாக் மதுபான கடைகளிலும் இன்று மாலை 6 மணியுடன் விற்பனையை முடித்து மூடி சீல் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி நெல்லையில் அனைத்து அரசு மதுபானக்கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டன. மேலும், பாதுகாப்பு காரணம் கருதி கடைகளின் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் கதவுகளை திறக்க முடியாதபடி இரும்பு கம்பி கொண்டு வெல்டிங்கும் செய்யப்பட்டது.

மதுபானங்கள் ஊரடங்கு காலத்தில் கொள்ளை போக வாய்ப்பு உள்ளதால் இந்த வெல்டிங் நடவடிக்கை என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது