சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியில் ரகசிய இடத்திலல் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக சாத்தான்குளம் தனிப்படை எஸ்ஐ டேவிட் தலைமையிலான போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரத்தை சேர்ந்த பிரபல புகையிலை வியாபாரி செல்வசேகர், சதீஷ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 200 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் யூகமாக கூறப்படுகிறது.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள புகையிலை வியாபாரி செல்வசேகரின் சகோதரர் ராஜலிங்கம் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.