வெங்காயம் அதிகமாக விளையும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் அங்கு இருந்து வெங்காய வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு நடமாடும் நியாய விலைக்கடை மூலமாக குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு டெல்லியில் விற்கப்படுகிறது. மக்கள் வரிசைகட்டி நின்று வாங்கிச் செல்கின்றனர்.













