இப்போது: நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 4 பேர் பலி – பிபின் ராவத் சென்றாரா?

0
1057

கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இருந்து வெலிங்டன் ராணுவ மைதானத்திற்கு உயர் அதிகாரிகளுடன் பறந்த ஹெலிகாப்டர் நீலகிரி காட்டேரி பகுதியில் மேகமூட்டம் காரணமாக கீழே விழுந்து தீப்பிடித்தது.

இதில் 4 பேர் பயணித்ததாக கூறப்பட்டது அதில் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. நான்கு பேர் உடல் எரிந்து இறந்துள்ளனர். விமானப் படை உயர் அதிகாரிகளுடன் 16 பேர் அதில் பயணம் செய்து இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல் கூறுகிறது.

உயரதிகாரிகள் சென்ற இந்த ஹெலிகாப்டரில் தளபதி பிபின் ராவத் இருந்ததாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று கூறுகிறது.ராணுவ ஆலோசனைக்காக அவர் வந்ததாகவும் அவர் மனைவியும் பயணம் செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here