தந்தையை அடித்தவரை தந்தையர் தினத்தில் கொன்ற மகன்

0
911

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த மதுரை எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த விஷ்ணு மற்றும் செய்யது இஷ்காக் ஆகிய இரு இளைஞர்களும்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் காவலராக பணிபுரிந்துவந்த முருகன் என்பவரை அடித்துள்ளனர்.

இதையடுத்து நடந்த சம்பவத்தை காவலர் முருகன் தனது மகன் வீரமுத்துவிடம் கூறியநிலையில் ஆத்திரமடைந்த மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை அடித்த இளைஞர்களை பழிவாங்க வேண்டும் நோக்கில் இருவரையும் தேடி வந்துள்ள நிலையில் விஷ்ணு தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் வீரமுத்து மற்றும் அவரது நண்பர்கள் அம்மையப்பன், சரவணன், நந்தா, சந்தோஷ், கண்ணன் உள்ளிட்ட 11பேர் கொண்ட கும்பல் தந்தையர் தினத்தில் தனது தந்தையை அடித்த விஷ்ணுவை கொலை செய்தே ஆக வேண்டும் என கூறியபடி விஷ்ணுவின் நண்பன் செய்யது இஷ்காக்கை மடக்கி பிடித்து விஷ்ணுவின் இருப்பிடம் குறித்துகேட்டபோது அவன் தகவல் அளிக்க மறுத்த நிலையில் அவனை அடித்து கழுத்தில் மிதித்து கொலை செய்தனர்.

இதனையடுத்து கொலை சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வீரமுத்து, மற்றும் அவரது நண்பர்கள் அம்மையப்பன், சரவணன், நந்தா, சந்தோஷ், லோகேஷ் , சத்யா கார்த்தி ஆகிய 8பேரை போலிசார் கைதுசெய்த நிலையில் மீதியுள்ள 3பேரை போலிசார் தேடிவருகின்றனர்.

மதுரையில் கடந்த 8நாட்களில் மதுபோதையால் 6க்கும் மேற்பட்ட படுகொலை சம்பவங்களும், 50க்கும் மேற்பட்ட மண்டை உடைப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here