மின்சாரம் இல்லாத வீட்டுக்கு டிவி வழங்கியது திமுக அரசு: உதயகுமார் தாக்கு

0
681

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் பயிற்சி முகாம் டி. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில், முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் பி ஆர்.பி.உதயகுமார் பேசியது :


ஜெயலலிதா 2011ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற போது, மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த அதிகமாக நிதி செலவாகும் ஆதலால் மடிக்கணினிக்கு பதிலாக டேப்லட் வழங்கலாம் என்று அதிகாரிகள் கூறிய போது, ஜெயலலிதா, ‘ என்ன விலை கொடுத்தாவது நான் மடிக்கணினி தான் கொடுப்பேன்’ என்று கூறினார். தற்போது இதுவரை 65 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்
அதேபோல், ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்குக்கு 2-ஜிபி டேட்டாவை இலவசமாகஅப்போது முதலமைச்சர் இருந்த எடப்பாடியார் வழங்கினார்.
இதன் மூலம் 10 லட்சம் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்றார்கள் .
இந்த இரு திட்டங்களையும

தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
அதேபோல்,ஜெயலலிதா ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி கிரைண்டர் ஆகியவற்றை வழங்கினார்.

2006 திமுக ஆட்சி காலத்தில் இலவச கலர் டிவி கொடுக்கப்பட்டது. அதில், மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு கலர் டிவி கொடுக்கப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை வழங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here