விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகை மதுமிதா சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது கையை கத்தியால் வெட்டிக் கொண்டார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதியை மீறியதால் மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்
இந்நிலையில் விஜய் டிவி நிர்வாகம் கிண்டி தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் மதுமிதா, தன்னை காயப்படுத்திக் கொண்டதால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்துக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக ஒப்பந்தத்தில் கூறியபடி ஏற்கனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார். மீதம் உள்ள பாக்கி தொகையை திருப்பி தருவதாக கூறி இருந்தோம். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார்.
அதில் எனக்கு தரவேண்டிய பாக்கி பணத்தை 2 நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று மிரட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தன் மீதான புகார் குறித்து விளக்கமளிக்க சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா என் மீது விஜய் டிவி நிர்வாகம் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது.
எனக்கு தர வேண்டிய மீதித் தொகையை கொடுக்கும் படி கேட்டேன். நிர்வாகமும் தருவதாக ஒப்புக் கொண்டது, பிறகு ஏன் என் மீது புகார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இந்த பிரச்சனையை விஜய் டிவி நிர்வாகமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் சாரும் பேசி தீர்க்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் உள்ளேன் என் மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை, நானும் யார் மீதும் எந்த புகாரும் கொடுத்ததில்லை. நான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன் என்பது குறித்து தற்போது பேச விரும்பவில்லை. நான் கையை அறுத்துக் கொண்ட காட்சிகளை ஒளிபரப்பினால் என் பக்கம் உள்ள நியாயம் புரிய வரும்.
விஜய் டிவி நிர்வாகமே ஒரு பிரஸ்மீட்டிற்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்கள், அப்போது இது குறித்து பேசுகிறேன். இப்போது வரை விஜய் டிவியுடனான ஒப்பந்த கட்டுப்பாடுகளின் படியே நடக்கிறேன்.
எனக்கு ட்ரீட்மென்ட் கூட விஜய் டிவி நிர்வாகம் மூலமாகத் தான் அளிக்கப்படுகிறது. அந்த சிகிச்சையில் தான் இருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என நடிகை மதுமிதா பேசினார்