திருப்பரங்குன்றம் பகுதியில் வாலிபர் கொலை

0
969

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டின்பட்டி அருகே ஒருவர் பிணமாக கிடந்தது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கை, மார்பு, தலை ஆகிய இடங்களில் வெட்டப்பட்டு கிடந்த ஒருவரின் உடல் கிடந்தது .


இதனைத் தொடர்ந்து, போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குளம் பன்னி யான் கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் ரவி (வயது 32 )என தெரியவந்தது இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here