பிளஸ் 2 படித்த மருத்துவர், பிரமாண்டமான மருத்துவமனை-செங்கத்தில் சீல் வைப்பு

0
754

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே 12ஆம் வகுப்பு படித்துவிட்டு மருந்தகம், ஆய்வுக்கூடம், படுக்கை வசதியுடன் பட்டப்படிப்பு படித்த மகன், 6 செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுடன் ரேணுகா என்பவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.

போலி மருத்துவரான ரேணுகாவின் பிரம்மாண்ட மருத்துவமனையில்,செங்கம் அரசு தலைமை மருத்துவர் .அருளானந்தம் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மருத்துவமனையை அதிரடியாக மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் தலைமை மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் வினோநந்தினி, மருந்தாளுநர் கேசவன், அலுவலக ஊழியர்கள், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி காவல் ஆய்வாளர், யுவராஜ் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here