சமீபத்தில் கோவைகாவல்துறை சார்பாக பார் உரிமையாளர்களுக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘பார்களுக்கு காரில் மது அருந்த வருவோர் ஓட்டுநருடன் வருவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வராதவர்களை, தகுதியான ஓட்டுநர் மூலம் அவரது காரிலேயே அவரது வீட்டில் கொண்டு விட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை வரவேற்றுள்ள தமிழ்நாடுமதுகுடிப்போர்விழிப்புணர்வுசங்கத் தலைவர் செல்லப்பாண்டியன், :கார்களில் வந்து “”பார்களில்”குடித்துவிட்டு போதைஏற்றவுடன் பொறுப்பாக ஒவ்வொருவீட்டின் பொண்டாட்டி,பிள்ளைகளிடம்ஒப்படைக்க உத்திரவிடும் கோயம்புத்தூர் காவல்துறை….பாருக்கு வந்தவர்கள் பொண்டாட்டி,பிள்ளைகளோடுதூங்காமல்…போதையில் இருந்து தெளியும்வரை” “விடிய,விடிய” போர் புரியாமலிருக்க , அவர்கள் வீடுகளுக்கு கோயம்புத்தூர் காவல்துறை சார்பாக “”காவலர்களை”காலைவரை நியமித்து, குற்றச்செயல்கள் ஏற்படாமல்தடுத்திட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.














