மனைவியிடம் பேசியதை கண்டித்த கணவருக்கு பாட்டில் குத்து

0
1117

சங்கரன்கோவில் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் காளிராஜ். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 26), கட்டிடத்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 21), கூலித்தொழிலாளி. இவர் அடிக்கடி சுரேஷ்குமாரின் மனைவியிடம் பேசி வந்துள்ளார். இதனால் சுரேஷ்குமார் கிருஷ்ணசாமியை கண்டித்துள்ளார்.

ஆனால் அவர் கேட்காமல் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் நேற்று சங்கரன்கோவில் பொட்டல் பகுதியில் வைத்து அவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் கிருஷ்ணசாமி பாட்டிலால் சுரேஷ்குமாரை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சங்கரன் கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here