டாக்டர் ராமதாஸ் பேரன் திருமணம்

0
612

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியரின் இளைய மகளான கவிதா – மருத்துவர் ஜெயகணேஷ் இணையரின் மூத்த மகன் மருத்துவர் நிதர்ஷனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல இணை செயலாளரும், முன்னாள் ரயில்வே இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி – பத்மினிதேவி இணையரின் மகள் சமித்ராவுக்கும் சென்னையில் நேற்று திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

மருத்துவர் ராமதாஸ் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, தேசிய தேர்வுகள் வாரியத்தின் முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ மருத்துவர் இராஜசேகரன் – திருமதி தில்லைநாயகி இணையர், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் – சவுமியா அன்புமணி, மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here