திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான (இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்டப்படுவதால் எழுந்த புகாரை ஒட்டி, கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தக் கோரி வள்ளியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து இந்து அமைப்புகள் பங்கேற்ற முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டுமானத்தை நிறுத்தி வைத்துள்ளதாக காவல்துறையும் பேரூராட்சி நிர்வாகமும் உறுதி அளித்தும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது .
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் முன்பு உள்ள மறைப்பை அகற்றாமல் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் உறுதி கூறினர். இறுதியில் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்பு மறைப்பு அகற்றப்பட்டு ஆர்ப்பாட்டமும் நிறைவடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா தலைமையில், மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், விசுவ இந்து பரிசத் மாநிலத் தலைவர் பெரி.குழைக்காதர் இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன், கோட்ட தலைவர்கள் தங்கமனோகர், சக்திவேலன் பாஜக மாவட்ட செயலாளர் வக்கீல் குமார முருகேசன், வள்ளியூர் நகர தலைவர் சிவராம குட்டி , ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய தலைவர் வக்கீல் மதுசூதனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.









