ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு கால்வாய் தோண்டுக: ஆலங்காயத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

0
479

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் தருமராஜபுரம் புல்லான்ஏரி இருந்து வண்ணன் ஏரி வரை தார் சாலை ஒட்டி கழிவுநீர் கால்வாய் அதை விரிவுபடுத்தி கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் கால்வாயை ஒட்டிய நெடுஞ்சாலை துறைக்கு செந்தமான‌ இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அ ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பின்பு கழிவு நீர் கால்வாய் தோண்ட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கும் நெடுஞ்சாலை துறைக் கோட்டாட்சியருக்கும் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

ஆனாலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது இதனை அடுத்து அங்கு வந்த இந்து முன்னணி ஆலங்காயம் ஒன்றியதலைவர் ஏழமலை,
சமூக ஆர்வலர் அரங்கபிரபு மற்றும் இளைஞர்கள், பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி பொறியாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சமாதான படுத்தியதை அடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here